தமிழக பட்டியல் வகுப்பு பட்டியல் பழங்குடியினர் வகுப்பு சட்டபேரவை உறுப்பினர்களுக்கு

தமிழக பட்டியல் வகுப்பு பட்டியல் பழங்குடியினர் வகுப்பு சட்டபேரவை உறுப்பினர்களுக்கு

வரும் 04 07 2018 அன்று   SC ST மானியக் கோரிக்கை தாக்கல் செய்து மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது என்பதை தங்களும் அறிவீர்கள்
அன்று ஒருநாள் மட்டும் கட்சி பாகுபாடு இன்றி SC ST சட்டமன்ற உறுப்பினர்கள்  விவாதத்தில் கலந்து கொண்டு அரசின் சிறப்பு கவனத்தை ஈர்க்கும் வகையில் உங்கள் கேள்விகள்
SC ST மக்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த கேள்விகள் மட்டுமே அன்று நீங்கள் பதிவு செய்ய வேண்டும்
01. மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே
தமிழகத்தில் இந்த நிதி ஆண்டில் ஆதிதிராவிடர் மருத்துவ கல்லூரி புதியதாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
02. மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில்
ஜெய்பீம் இரவு பாடசாலை வகுப்பு தொடங்க அரசு சார்பில் சிறப்பு திட்டம் உள்ளதா
03.தமிழகத்தில் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு எதிராக அரசு இதுவரை பிறப்பித்துள்ள அராசணைகளை திரும்ப பெற்று ஆதிதிராவிடர் மாணவர்கள் தொடர்ந்து அரசு உதவித்தொகை உதவியுடன் உயர்கல்வி படித்து பட்டம் பெற்று முன்னேற்றம் காணும் வகையில் அரசிடம் சிறப்பு திட்டம் உள்ளதா மேலும் இத்திட்டத்தை அரசு வரிவுபடுத்த அரசிடம் திட்டம் உள்ளதா என அறிய விரும்புகிறேன்
04.மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த1994 ம் ஆண்டு ஆதிதிராவிடர் இளைஞர்கள் இளம்பெண்கள் 200 பேர்கள் இளம் தொழில் அதிபர்களாக ஆகும் விதத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் திருப்பூரில் பிண்ணலடை தொழிற்சாலை தொடங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டமன்றத்தில் அறிவித்தார் அந்த திட்டம் என்ன நிலையில் இருக்கிறது என்று அறிய விரும்புகிறோம் இத்திட்டம் நிறைவேற்ற தற்போது உள்ள அம்மா அரசு நடவடிக்கை எடுக்குமா மாண்புமிகு சட்டபேரவைத் தலைவர் அவர்களே
05.மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் ஆரம்ப பொது சுகாதார நிலையம் மற்றும் கட்டிடத்துடன் கூடிய கிளை நூலகம் அமைக்க அரசின் கொள்கை குறிப்பில் உள்ளதா அப்படி இல்லை என்றால் அரசு சிறப்பு நிகழ்வாக கருதி மேற்படி திட்டங்கள் நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்
06.மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு உழைத்த உன்னதமான தலைவர்களான 01.அய்யா அயோத்திதாசர் பண்டிதர் அவர்கள் 02.அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்
03.M.C.ராஜா அவர்கள் படத்தை சட்டப்பேரவை வளாகத்தில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மேற்படி தலைவர்களின் வரும் மாணவர்கள் சமுதாயம் அறிந்து கொள்ளும் விதமாக இவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் வெளியீடு செய்ய அரசின் கொள்கை திட்ட பரிசீலனையில் உள்ளதா என அறிய விரும்புகிறேன்
07.மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்கள் குறைந்த அளவில் வாழும் பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பு நலனை அரசு கருத்தில் கொண்டு காவல்துறை காவல் உதவி நிலையம் மேற்படி சொன்ன பகுதிகளில் அமைக்க அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்
08.மாண்புமிகு சட்டபேரவை தலைவர் அவர்களே
சென்னையை குடிசையில்லா நகராக மாற்ற சென்னையின் பூர்வீக குடிமக்களான ஆதிதிராவிடர் மக்களை வலுக்கட்டாயமாக அவர்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்து சென்னைக்கு ஒதுக்குபுறமான கண்ணகிநகர் எழில் நகர் போன்ற நகர்களில் குடி அமர்த்தப் படுகிறார்கள் இந்த பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை
இதற்கு மாற்றாக அரசு சென்னையிலே அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி தரப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
09.மாண்புமிகு
சட்டபேரவைத் தலைவர் அவர்களே
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு சொந்தமான 16.இலட்சம் பஞ்சமி நிலங்கள் இம்மக்களிடமிருந்து நயவஞ்சகமாக அபகரிக்கப்பட்டு உள்ளது இந்நிலங்களை மீட்டு உரிய இம்மக்களிம் சேர்க்க மாவட்டந்தோறும் இஆப பணியை சேர்ந்த தனிஅலுவலர்களை நியமனம் செய்து உரிய காலக்கெடுவுக்கு அந்த நிலங்களை மீட்டெடுத்து ஒப்படைக்க அரசிடம் எதாவது சிறப்பு திட்டம் உள்ளதா என அறிய விரும்புகிறேன்
10.மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலட்சக்கணக்கான ஆட்சேபனையற்ற தரிசு நிலங்கள் மற்றும் பல்வேறு இனங்கள் கொண்ட அரசு மானவரி நிலங்கள் இருக்கிறது இந்நிலங்களை அரசு ஆய்வு செய்து
நிலமற்ற ஆதிதிராவிடர் மக்களுக்கு இந்நிலங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பாக கொண்டு வருகிறேன்
11.மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே
ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் பெயர் அளவில் மட்டுமே செயல்படுகிறது 2009 ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் கோ.சி.மணியால் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத்தை ரத்து செய்து உள்ளாட்சி துறையில் இணைக்கப்பட்டது இதனால் ஆதிதிராவிடர் மக்களுக்கு புதிதாக கட்டப்பட வேண்டி வீடுகள் கட்டப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது இதை மாண்புமிகு அம்மா அரசு சிறப்பு நிகழ்வாக கருத்தில்கொண்டு மீண்டும் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்
12.மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அனைத்து பள்ளிகளிலும் வைபை வசதி கொண்டு வரவேண்டும் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி தரம் ஆங்கில கல்வி முறை மற்றும் CBSC கல்வி தரத்துக்கு இணையாக மாணவர்கள் பயில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆதிதிராவிடர் மாணவர்கள் ஆரம்ப நிலை  நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு செய்து தரப்பட வேண்டும் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் ஒவ்வொரு பள்ளியில் ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக கழிப்பறை கழிப்பிடம் கட்டித்தரப்பட வேண்டும் ஒவ்வொரு பள்ளியில் மற்றும் விடுதியில் நூல்நிலையம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த வசதிகள் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளுக்கும் பொறுந்தும் வகையில் இருக்க வேண்டும்
மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயவுசெய்து வரும்
04 07 2018 அன்று நடைபெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மானியக் கோரிக்கையின் போது உங்கள் அறிய கோரிக்கையை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைய வேண்டும் என எனது அன்பான வேண்டுகோளாக உங்களுக்கு விடுக்கின்றேன்.

அன்புடன் உங்கள்

சமூகநீதி போராளி
கே.அய்யப்பன்
மாநில ஆதிதிராவிடர்
நலக்குழு உறுப்பினர்
தமிழக அரசு

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி