சென்னை சேலம் 8 வழிச்சாலை
சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த வேண்டி, "தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம், 1956" (48 of 1956) கீழ் அரசு, அரசிதழில் (Gazatte) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் அதாவது நிலங்கள் மற்றும் வீடுகளை இழப்போர் தங்களுடைய ஆட்சேபத்தை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரத்திலுள்ள "சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (LA)", அவர்களிடம் தங்களுடைய ஆட்சேபனைகளை, இந்த அறிவிப்பு வந்த 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். அவரும், மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபனைகளுக்கு உரிய பதிலை தரவேண்டும் என்கிறது இந்த அறிவிப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி திட்டத்தால் பாதிக்கப்படப்போகும் அனைவரும் தம்முடைய உணர்வுகளை பதியுமாறு கேட்டுக்கொள்கிறோம். அறிவிப்பு வெளியான தேதி ஜூன் 11 ஆகும், நமக்கு குறைந்த நாட்களே இருக்கின்றன, அதற்குள்ளாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கோருகின்றோம்.
(அரசு வெளியிட்ட அறிவிப்பு, அரசின் இணையத்திலும் உள்ளது அதன் நகல் பூவுலகின் நண்பர்கள் இணையத்தளத்தில் இருக்கிறது, தேவைப்படுவோர் அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்)
Comments
Post a Comment