அவர் ‘தந்தை பெரியார்
சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் பிரிட்டிஷ் கல்வியைத் தவிர்த்து தேசியக் கல்வி என்று கல்விச் சாலையை ஆரம்பித்தபோது அனைவருக்கும் வ.வே.சு. ஐயரின் தேசபக்தி தெரிந்தது.
ஆனால் பெரியாருக்கு மட்டும் அந்தக் கல்விக் கூடத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி விருந்து, மற்றவர்களுக்குத் தனி விருந்து என்கிற பாகுபாடு தெரிந்தது. பொது பந்தி போடு, இல்லை என்றால் கல்விக் கூடத்தை இழுத்து மூடு என்று போராடி பொதுப் பந்தியைக் கொண்டு வந்தார்.
பிரிட்டிஷ் காலத்திலேயே போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை சுதந்திரத்திற்கு பிறகு இட ஒதுக்கீடு திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பைக் கெடுத்துவிடும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அனைவருக்கும் அந்தத் தீர்ப்பு திறமைக்கான ஆதரவு தீர்ப்பாகத் தெரிந்தது.
ஆனால் பெரியார் மட்டும் கல்வி மற்றும் சமூக ரீதியாக சமமான வாய்ப்புப் பெறாதவர்கள் சமூகரீதியாக மேற்தட்டில் உள்ளவர்களோடு போட்டியிட வாய்ப்பு இல்லை என்று சொல்லி இட ஒதுக்கீட்டை ஆதரித்து போராடினார்.
சமஸ்கிருதம் தெய்வீக மொழி என்று ஒரு பக்கமும் ஹிந்தி நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழி என்றும் தமிழ் தாய் மொழி என்றும் ஆளாளுக்கு கம்பு சுத்திக்கொண்டு இருந்தவேளையில் ஆங்கிலம் தான் நம் வாழ்வை மேம்படுத்தும் மொழி என்று பகிரங்கமாக பேசியவர் பெரியார்.
உடன்கட்டைக்கு தடை பெற்றுத் தந்த ராஜாராம் மோகன்ராய் அதோடு சேர்ந்து விதவைத் திருமணத்தை சட்டமாக கொண்டு வராதது பிழை என்றும் உடன்கட்டையை விட கொடுமையானது விதவை திருமண மறுப்பு என்று பேசுகிறார்.
பழைய புராணங்கள் இதிகாசங்கள் சாஸ்த்திரம் சம்பிரதாயம் என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழ் சமூகத்தை காட்டுமிராண்டிகள் என்று கடுமையாக சாடுகிறார்.
நமது கடவுள் சாதி காக்கும் கடவுள்
நமது மதம் சாதி காக்கும் மதம்
நமது மொழி சாதி காக்கும் மொழி
நமது இலக்கியங்கள் சாதி காக்கும் இலக்கியங்கள் என்று மிகக் கடுமையாக சாடுகிறார்.
நமது மதம் சாதி காக்கும் மதம்
நமது மொழி சாதி காக்கும் மொழி
நமது இலக்கியங்கள் சாதி காக்கும் இலக்கியங்கள் என்று மிகக் கடுமையாக சாடுகிறார்.
இங்கே ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும்...
நமது மதம் மொழி இலக்கியங்கள் என்று அனைத்தையும் போற்றிப் புகழ்ந்த அனைவரும் நம் வாழ்வுக்கு எதிராக இட ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் ரத்து செய்தபோதும், ராஜாஜி குலக்கல்வி சட்டம் கொண்டு வந்தபோதும் பாவாடைக்குள் பதுங்கிக் கொண்டனர்.
பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்றும் நம் இலக்கியங்களை இழிவுபடுத்திவிட்டார் என்று சொல்கிற எவரும்,
மனு முதுகுநூல் போடாதவர்களை வேசிமகன் என்று சொல்லும்போதோ கீதை முதுகுநூல் போடாதவர்களை இழிபிறவிகள் அதாவது தவறான வழியில் பிறந்தவர்கள் என்று சொல்கிறபோதும் அதை எதிர்க்கவில்லை.
நம் வாழ்வாதாரத்தை முடிவு செய்யும் இட ஒதுக்கீடு பிரச்சினையின்போதும் வாய் திறக்கவில்லை.
சுருக்கமா சொன்னா.. ஒரு தந்தை தன் மகனை தவறு செய்யும்போது நீ உருப்படுவியா என்று திட்டினாலும் மகனுக்கு பிரச்சினை என்றால் முதலில் உதவிக்கு வந்து நிற்பான்.
உங்கப்பா உங்களை இப்படி திட்டுகிறாரே என்று அந்த தந்தையின் மகனை உசுப்பி விடும் எந்த நாயும் அந்த மகனுக்கு பிரச்சினை என்றால் அதை மவுனமாக ஆனந்தமாக ரசிக்கும்.
கதையின் கருத்து..
நம்மை திட்டினாலும் நம் தந்தை மகனுக்கு நல்லதே செய்வார்,
நம்மை பாராட்டினாலும் தெருவில் போகும் நாய் நம்மை கடிக்கத்தான் செய்யும்.
நம்மை பாராட்டினாலும் தெருவில் போகும் நாய் நம்மை கடிக்கத்தான் செய்யும்.
இதனால் தான் அன்றும் இன்றும் பெரியார் மொழி மதம் பண்பாடு இலக்கியம் என்று அனைத்தையும் விமர்சனம் செய்தாலும் அவரை போற்றி புகழ்ந்துகொண்டே இருக்கிறோம்.
அதனால்தான் அவர் ‘தந்தை பெரியார்’
- சிதம்பரம் பெரியசாமி
Comments
Post a Comment