மனித உரிமை செயற்பாட்டாளர் அனா அம்மையார்.
ஜெனீவாவில் ஆண்டு தோறும் நான் தவறாமல் காணும் அற்புதமான பெண்மணி மனித உரிமை செயற்பாட்டாளர் அனா அம்மையார்.
வழமை போல் இம்முறையும் அவரோடு பேசிய பொழுது அவர் வலிமையாக தமிழ் மக்களுக்கு சொன்ன கருத்து என்பதை விட விடுத்த வேண்டுகோள்:
"தமிழின படுகொலைக்கான நீதி வேண்டும் போராட்டத்தை ஒரு சிலர் செய்வார்கள் என மற்றவர்கள் பார்வையாளர்களாக இருப்பதை நிறுத்தி ஒவ்வொரு புலத்து தமிழர்களும் போராடுங்கள்!
தனியே இப்படியான எழுச்சி நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு கடன் முடிந்தது என வீட்டுக்கு சென்று உண்டு படுத்து இயல்பு வாழ்வு வாழ்வதை நிறுத்திடுங்கள்.
ஆண்டு முழுவதும் 365 நாளும் நாம் எம் படுகொலையான தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்க என்ன செய்தோம் என பொழுதெல்லாம் நினைத்து நினைத்து உழையுங்கள். போராடுங்கள்.
போராடாமல் எதுவும் கிடைக்காது. சும்மா இருந்தால் உணவு கூட கிடைக்காது. நீதி கிடைக்குமா?
சிந்தியுங்கள் தமிழ் மக்களே. போராடுங்கள்! ஒவ்வொரு நாளுமே முயற்சிகளை தொடருங்கள்!"
மனிதத்தை காக்க துடித்த அந்த தேவதையின் துடிப்பான வார்த்தைகள் என் இனத்தின் வீச்சு பெறாத முயற்சிகளின் முனைப்பு பெறாத தன்மைகளை எண்ணி வெட்கமும் வேதனையும் கொள்ள வைத்தது.
போற்றுவோம் இவர்கள் போன்ற மனிதம் போற்றும் மாந்தநேயவாதிகளை. அதே போல் இவர்கள் போன்ற உண்மையான மனிதம் போற்றி போராடும் இதயங்களை வென்று அரவணைத்து போராடுவோம்!

Comments
Post a Comment