பரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி!

பல படங்களை "இது படம் அல்ல பாடம்" என்று பொதுவாகச் சொல்வோம் அவற்றையெல்லாம் பொய்யாக்கி உண்மையிலேயே இது தான் "படம் அல்ல பாடம்!" என்று போற்றும் வகையில் திரையில் ஒரு புரட்சி தான் தம்பி மாரி செல்வராஜ் இயக்கி, வெளிவந்துள்ள 'பரியேறும் பெருமாள்' திரைப்படம். தம்பி மாரி செல்வராஜின் அனுபவம், வயது இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு ஆகச்சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. தான் சொல்லவந்த கருத்தை அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம்; அதற்காகக் காட்சிகளைத் திணிப்பது சத்தமான உரையாடல்களைப் பேசுவது அப்படியெல்லாம் இல்லாமல் அவனுடைய வலியை அனைவருக்கும் கடத்தியிருப்பதால் தான் இது ஆகச்சிறந்த படைப்பு! இப்படத்தைப் பார்க்கின்றபோது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'சிண்ட்லர்ஸ் லிஸ்ட்' (Schindler's List) திரைப்படத்தை அவருடைய யூத இனம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை உணர்த்துவதற்காக எடுக்கிறார். அப்படத்தைப்பார்த்த ஹிடலரின் வம்சாவழியினர் எல்லோரும் எங்கள் முன்னோர்கள் இவ்வளவு கொடுமையானவர்களா? என்று எண்ணி திரையரங்கைவிட்டு வெளிவரும்போது வெட்கி தலைகுனிந்தார்கள்; அதேநேரம் பாதிக்கப்பட்ட யூத இனத்தைச் சார்ந்தவர்கள் கண்ணீரோடு கடந்து போனார்கள் அதுமாதிரி பரியேறும் பெருமாள் திரைப்படம், சாதியம் சமூகத்திற்கு எவ்வளவு கொடிய நோய் என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறது, விளக்குகிறது. சாதியக் கொடுமைகளுக்குக் காரணமானவன், அதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டவன், சாதியச் சிந்தனையுள்ளவன் எல்லோரும் திரையரங்கை விட்டு வெளிவரும்போது தலைகுனிவான்; அதேவேளையில் சாதியக் கொடுமைகளினால் ஏற்பட்ட காயத்தை நீண்டகாலமாகச் சுமந்தவன் மௌனமாகக் கடந்துபோவான்; இவ்விரண்டையும் ஒரே திரைப்படத்திற்குள்ளேயே ஒரு படைப்பாளியால் கடத்துவது என்பது பெரும்சாதனை.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சாதிய ஒழிப்பிற்காக எத்தனையோ இயக்கங்கள் எத்தனையோ முன்னோர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போராட்டம் வள்ளுவப் பெருந்தகையின் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...' என்பதிலிருந்தே தொடங்குகின்றது. 'சாதி இரண்டொழிய வேறில்லை!', என்றும் 'பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி, தோல், எலும்பினும்
இலக்கமிட்டு இருக்குதோ?' என்ற சித்தர் பாடல்களிலினூடாகத் தொடர்கிறது இந்தச் சாதியொழிப்புப் போராட்டம். ஆனால் யாரும் தான் சுமந்து இருக்கின்ற, அனுபவித்து வருகின்ற வேதனையை இன்னொருவருக்கு முழுமையாகக் கடத்தியதே இல்லை; பலர் பேசியிருக்கிறோம்! எழுதியிருக்கிறோம்! ஆனால் மற்றவர்களை உணர வைத்தோமா? என்பதில் தோற்றிருக்கிறோம் என்பதே உண்மை. அவ்வகையில் இப்படம் இரண்டு மணிநேரத்திலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை, வலியை அனைவருக்கும் கடத்திவிடுகின்றது என்பதனால் படைப்பாளியாக என் தம்பி மாரி செல்வராஜுக்கும், இதுபோன்ற கதையைக் கேட்டதும் தயாரிக்கப் பயப்படுபவர்கள், எதற்கு இந்தப் பிரச்சினை? இப்படத்தை எடுத்து எப்படிச் சந்தைப் படுத்துவது? என்று கேள்விகேட்பவர்கள் மத்தியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தானே தயாரித்து, வெளிக்கொண்டுவந்ததம்பி பா.இரஞ்சித்க்கும் தான் இந்த முழுப்பெருமையும் வெற்றியும் சேரும்.
'சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிடச் செத்தொழிவதே மேல்!' - என்கிறார் அண்ணல் அம்பேத்கர். 'சாதிதான் சமூகம் என்றால்; வீசும் காற்று விசமாகட்டும்!' - என்கிறார் நம்முடைய கவிஞர் பழனிபாரதி, அதுபோல இந்தப் புரையோடிப்போன சாதியப் புற்றை இடித்துத் தள்ளும் கடப்பாரையாகத்தான் இத்திரைப்படத்தைப் பார்க்கிறேன். எல்லோரையும் இப்படத்தை. பாருங்கள் என்று நாங்கள் அழைப்பது இரசிகர்கள் என்ற மனநிலையில் அல்ல; இது ஒவ்வொருவரின் கடமை!
பரியேறும் பெருமாள் இப்படத்தை நாம் கொண்டாடவேண்டும், பாதுகாக்கவேண்டும். இதை ஒரு பொழுதுப்போக்குப் படம் என்று பாராமல் இப்படத்தைப் பேராவணமாக நான் கருதுகிறேன். ஒரே இன சமூகத்திற்குள் எவன் உயர்ந்தவன்? எவன் தாழ்ந்தவன்? எவனெல்லாம் தன்னைத தவிர மற்றவனையெல்லாம் தாழ்ந்த சாதி என்ற எண்ணம் உள்ளவன் தான் தாழ்ந்த சாதியாக இருக்கமுடியும் என்பதே எதார்த்த உண்மை. இத்திரைப்படத்தின் வாயிலாகத் தம்பி மாரி செல்வராஜின் வலியை நமக்குள் கடத்தியிருக்கிறான் அதை நீங்கள் ஒவ்வொருவரும் பார்த்து உணர்ந்துவிட்டால் இப்படைப்பாளிக்கு மிகப்பெரிய வெற்றிதான். இப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியுள்ள தம்பி மாரி செல்வராஜ் மற்றும் அவருடன் ஒத்துழைத்த ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக்கலைஞர்கள், இத்திரைப்படத்தில் நடித்துள்ள கதிர், ஆனந்தி உள்ளிட்ட எல்லாக் கலைஞர்களுமே அந்தந்த கதைப்பாத்திரத்தோடு ஒன்றிபோய் ஒவ்வொரு நொடியும் நமக்குப் பதற்றத்தைத் தருமளவிற்குத் திரைக்கதை திருப்பங்களோடு மிகச்சிறப்பாக இப்படம் வெளிவந்திருக்கிறது என்பதை உளமார பாராட்டுகிறேன். தம்பி மாரி செல்வராஜையும் மற்றும் தம்பி பா.இரஞ்சித்தையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன் அதேநேரம் பொறாமையும்படுகிறேன். ஏனெனில் இப்படி ஒரு படைப்பை எந்தக் கலைஞன் பார்த்தாலும் நாம் படைக்கவில்லையே என்று நினைப்பான் அந்த அளவிற்கு ஒரு சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. ஆகச்சிறந்த படைப்பைத் தந்த இருவருக்கும் மீண்டும் ஒருமுறை உளப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற வலுவான கதைகளுக்குத் தயாரிப்பாளர்களோ, திரையரங்குகளோ கிடைப்பதில்லை என்பது ஒரு சாபக்கேடு! ஐயா சோ அவர்கள் கூட ஒருமுறை சொல்லியிருந்தார், சிறந்த படைப்பாளிக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைப்பதில்லை; நல்ல தயாரிப்பாளருக்கு சிறந்த படைப்பாளி கிடைப்பதில்லை என்று இது ஒரு முரண்; இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இங்குப் பா.இரஞ்சித் போன்றவர்கள் தயாரிப்பாளராக இல்லையென்றால் பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் வெளிவராது; தம்பி விஜய் சேதுபதி போன்றவர்கள் இல்லையென்றால் மேற்குத்தொடர்ச்சிமலை போன்ற படங்கள் வராது; ஏனென்றால் உலகமே வர்த்தகமயமாகிப் போய்விட்டது, நம் நாடே ஒரு சந்தையாக மாறிவிட்டது; அதிலும் திரைத்துறை ஒரு மாபெரும் சந்தையாக இருக்கிறது. அந்தச் சந்தையில் கலை, படைப்பு நோக்கம் என்பதெல்லாம் இல்லை; இங்குப் பொழுதைப்போக்குவதற்குத் தான் இடமிருக்கின்றது; நல்ல பொழுதை ஆக்குவதற்கான இடமாக இது இல்லை; தற்போது தான் இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டேயிருக்கிறது. காக்கா முட்டை, கோபிநயினாரின் அறம், தம்பி செழியனின் டூலேட்(To-Let), இராஜு முருகனின் ஜோக்கர், மேற்குத்தொடர்ச்சிமலை அவ்வகையில் இப்போது பரியேறும் பெருமாள் இப்படிச் சில அபூர்வமான படைபாளிகள் வந்துகொண்டுதானிருக்கிறார்கள்; அவர்களை வீழ்த்தாமல் வாழ்த்தி முன்நகர்த்தி விடவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
---
சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
===================================================================
#பரியன்ஏன்இப்படி_இருக்கிறான்...?
#திருப்பிஅடித்திருக்கவேண்டாமா...?
இது பல்வேறு தோழர்களின் விமர்சனம். சமூகக் கோவத்திலிருந்து தான் இந்த கருத்து வருகிறது. ஆகவே, இக்கருத்தை மதிக்கிறேன். ஆயினும், இந்த திரைப்படத்தை நாம் வேறு விதமாக பார்க்க வேண்டியுள்ளது.
#பரியேறும்_பெருமாள் திரைப்படத்தைப் பற்றி விரிவான விமர்சனங்கள் எழுதப்பட வேண்டும். ஆயினும், இந்தப் பதிவில் நான் இந்தக் கருத்தை மட்டும் விவாதிக்க விரும்புகிறேன்.
அந்த சாதி வெறியர்களைக் கொலை செய்தால் கூட நியாயம்தான் என்று படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனையும் சிந்திக்க வைத்துவிட்டு, நாயகன் எந்த பதில் தாக்குதலும் செய்யாதவாறு காட்டுவதை இயக்குநர் தவறவிட்ட இடம் என்றோ, அவரது தடுமாற்றம் என்றோ நான் கருதவில்லை. அவர் தெரிந்தேதான் இதைச் செய்கிறார். இவ்வளவு வன்கொடுமைகளையும் நாமே மானசீகமாக அனுபவித்த கோவத்துடன், நாம் ஒரு "நல்ல" முடிவை எதிர்பார்க்கிறோம். ஆனால், இயக்குநர் நிதானமாகவே இருக்கிறார், பரியனைப் போல.
பரியனுக்கு நடந்த வன்கொடுமைகளுக்கு, அவன் ஒரு நாலு பேரைக் கொன்றுவிட்டால் நம்மை திரைப்படம் "மனதிருப்தி" பெறச் செய்திருக்கும். ஆனால், இயக்குநரின் நோக்கம் அதுவல்ல. அத்தகைய மனதிருப்தியால் உண்மையில் என்னதான் கிடைத்துவிடப் போகிறது?
இந்தத் திரைப்படத்தில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களும் இந்த சமூகத்தில் நிலவும் பச்சையான உண்மை, இரண்டு கதாப்பாத்திரங்களைத் தவிர.
ஒன்று கதாநாயகன், மற்றொன்று கதாநாயகி.
சாதி வெறிபிடித்த சமூக சூழலிலும், குடும்பச் சூழலிலும் பிறந்த, ஆனால், சாதி வெறியோ, சாதி உணர்வோ, சாதியைப் பற்றி ஏதும் அறிதலோ கூட இல்லாத கதாநாயகி. இப்படி ஒரு கதாப்பாத்திரம் நடப்பு நிலைமையில் இல்லை. அவள் சாதி இன்னும் தோன்றியிராத ஒரு சமூகத்திலுள்ள, அல்லது சாதி ஒழிந்துவிட்ட ஒரு சமூகத்திலுள்ள ஒரு மனுசி. ஒரு குறியீடு... இலட்சியக் குறியீடு.
சாதியின் அத்தனை கொடுங்கரங்களாலும் தாக்கப்பட்டும்கூட நிதானமானவனாக, அமைதியை விரும்புபவனாக ஒரு கதாநாயகன். இந்த அம்சத்தில், இப்படி ஒரு மனிதனும் இந்த சமூகத்தில் சாத்தியம் இல்லை.
இந்த இரண்டு கற்பனை கதாப்பாத்திரங்களையும் தான் சொல்லவரும் கதை, திரைக்கதை மற்றும் கருத்துக்காக இயக்குநர் புனைந்து உருவாக்கியுள்ளார்.
திருப்பி அடிப்பதைத் தவிர்க்க வேண்டும், அமைதி வேண்டும், வன்முறை கூடாது என்ற சிந்தனையெல்லாம் இயக்குநரிடம் அறவே இல்லை. ஆனால், அவர் இயற்கையான மனித உணர்விலிருந்து அமைதியை விரும்புகிறார். அது சாத்தியமில்லை என்று தெரிந்தும் கூட விரும்புகிறார்.
(இயக்குநர் 2016-இல் எழுதிய கவிதையில் அவரது இந்தகைய கண்ணோட்டம் தொனிப்பதைக் காணலாம்:
சாதி வெறியர்களை நோக்கி தனது இரண்டு கரங்களையும் நீட்டுகிறார். ஒன்று அமைதி வழித் தீர்வுக்கானது, மற்றொன்று வன்முறை வழித் தீர்வுக்கானது. தேர்ந்தெடுப்பது அவர்கள் கையில்தான் உள்ளது.
பரியன் எதிரிகளை தாக்கி, நிலைகுலைய செய்துவிட்டு, அவர்களுக்கு உயிர்ப்பிச்சை போட்டுவிட்டு, எதிரியின் மேல் காறி உமிழ்ந்துவிட்டு, தனது கருணையை பிச்சையாக எறிந்துவிட்டு செல்கிறான். இத்திரைப்படம் திருப்பி அடிப்பதைப் பேசவில்லை என்பது இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைதான்.
சாதி வெறியர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ஒவ்வொரு மனிதனும் எதிரி கிடையாது. அதிலுள்ள விடாப்பிடியான சாதி வெறியர்கள் மட்டுமே எதிரிகளாகிறார்கள். எதிர் தரப்பிலிருந்து நபர்களை வென்றெடுத்து, எதிரிகளை எண்ணிக்கையில் குறைப்பதே அரசியல் ரீதியாகவும், Strategical-ஆகவும் சரியான வழியாகும். ஒடுக்கப்பட்டோர் தனது அமைதிக்கான கரத்தை நீட்டுவது அப்படிப்பட்டதே. இதற்கு பெயர் சரணடைதல் இல்லை.
தோழர் Mari Selvaraj-இன் படைப்பு அத்தகைய Strategical-ஆன என்றே மதிப்பிடுகிறேன்.
தனது படைப்பில் திருப்பி அடிக்கும் தீர்வை முன்வைப்பதா இல்லையா என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு படைப்பாளிக்கு இயற்கையாகவே இருக்கிறது. அவருக்கு அதுகுறித்து யாரும் அறிவுரை சொல்ல வேண்டியதில்லை.
அதே சமயத்தில், சாதியத்தை பற்றி படம் எடுக்கிறேன் பேர்வழி என்று வரும் பிற சாதிகளைச் சேர்ந்த இயக்குநர்கள் நேர்மையாக படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தால், 'உறியடி' போன்று திருப்பித் தாக்கும் படங்களை எடுப்பது மட்டுமே சரியாக இருக்கும்.
ஏனெனில், நீண்ட காலமாகவே ஒடுக்கப்பட்டவர்கள் சாதிவெறியை எதிர்த்துப் போராடியும், சண்டையிட்டும், தியாகம் புரிந்துகொண்டும் தான் இருக்கிறார்கள். மற்ற சாதிகளில் பிறந்தவர்கள் அவர்களோடு கரம் கோர்க்கவும், சாதி ஒழிப்பிற்காக போராடவும், உயிரை விடக்கூட தயாராவதும் மட்டுமே இங்கு அவசர, அவசிய தேவையாக உள்ளது.
Manuvel
==================================================================
பரியேறும் பெருமாள் திரைப்படம் நான் பார்த்து விட்டேன்.
நம் அனைவருடைய வாழ்க்கையிலும் நடந்த, நாம் கண்ட நிகழ்வுகளையே இத்திரைப்படத்தில் காட்சிகளாய் ஆங்காங்கே காட்டியிருக்கிறார் இயக்குநர். துளியளவும் ஆபாசமோ இரட்டை அர்த்த வசனமோ கிடையாது அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம். பெரும்பாலான நன்கு படித்த இளைஞர்கள் கூட போட்டித்தேர்வில் தோற்பதற்கு முக்கிய காரணம் ஆங்கில அறிவில் திறன்குறைவே. நம்ம பரியனும் அப்படித்தான். நமக்கு வாய்த்த ஆங்கில ஆசிரியரும் அப்படியே. மற்றபடி இன்றைய சமூக பொருளாதார வாழ்க்கையில் பொருள் இருக்கிறவனும் இல்லாதவனும் தனக்கு கீழேயுள்ள (சாதி) மக்களை நாயைவிட கேவலமாக நினைக்கும் நினைப்புக்கு செருப்பை கழட்டி பாலிஸாக அடித்திருக்கிறார் இயக்குனர். இது போன்ற படங்கள் எப்போதோ வந்திருந்திருக்க வேண்டும்.
வெறும் பொழுதுபோக்கை தவிர்த்து தனது திரைப்படங்களின் மூலம் பொதுமக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதவர்களை தளபதியாக, தலயாக நினைத்து தடுமாறிக் கொண்டிருக்கும் நம் இளைஞர்களுக்கு இந்த படத்தின் மூலம் கிடைப்பது ஒரு சிறந்த ஊக்கமருந்து மற்றும் சுயபரிசோதனைக்கான வாய்ப்பு. நமக்கான பலமே கல்விதான் என்பதை நங்கூரமிட்டு காட்டியிருக்கிறார்கள். இந்த பரியேறும் பெருமாள் நடைமுறை வாழ்க்கையின் சாயல். இது போன்ற படங்களை இயக்குவதற்கு தேவையான திமிரும் தெளிவான சிந்தனையும் அதிகமாகவே இருப்பது தெரிகிறது.
வெற்றி பெறாதவரைக்கும் தமது ஊர்களில் உழன்று கிடந்தவர்கள் வெற்றியே பெற்றபின்னும் நமது அடையாளம் தெரிந்தால் எங்கே பிற சமூகத்தால் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்று நொருங்கி கிடக்கின்ற மக்கள் மத்தியில், முற்றிலும் சமூக சிந்தனை உள்ள ஒருவரால் மட்டுமே இது போன்ற படங்களை தயாரிக்க முடியும். சகோதரர் பா.ரஞ்சித்திற்கு வாழ்த்துக்கள்.
இதில் அம்பேத்காரை பார்க்கலாம், இளையராஜாக்களை பார்க்கலாம்.
நாம் அனைவரும் மற்றவர்களை ஊக்கப்படுத்தி கொண்டுருந்தாலும் கூட இந்த படம் தருகின்ற ஊக்கம் வேற லெவல். நீங்கள் திரைப்படமே பார்க்காதவராக இருந்தாலும் கூட பரவாயில்லை இந்த படத்தை குடும்பத்துடன் முடிந்தால் நமது வீட்டருகே இருக்கும் நமது மாணவர்களையும் சேர்த்து போய் பாருங்கள். This movie creates ultimate motivation about the importance of study among the depressed class people.
இது, மற்றவர்களுக்கு தெரிவது படம் நமக்கு தருவது பாடம்.
=====================================================================
மாரி செல்வராஜின் வரிகள். Mari Selvaraj...
உங்களைவிட வயதில் இளையவனொருவன்
உங்கள் தந்தையை பெயர் சொல்லி அழைப்பதை
நீங்கள் கேட்டிருக்கிறீர்களா
அப்படியொரு அகால தருணம்
உங்களுக்கு வாய்க்காதிருக்கட்டும்
ஒருவேளை கேட்டுவிட்டால்
அந்த சத்தம்
ஒரு குருட்டு கூகையின் வழி தப்பிய தூரத்து அலறலை போல
உங்களை அச்சுறுத்தும்
அந்த சத்தம்
கடவாயில் கறி எழும்பு சிக்கிய தெரு நாயின் குமட்டும் இருமலாய்
வாலாட்டி உங்களை வெறுப்பேற்றும்
அந்த சத்தம்
தன் குட்டிகளையே விழுங்கிய ஒரு பூனையின் விஷ ஏப்பத்தை போல
நெருக்கமாய் கேட்டு உங்களை தொந்தரவு செய்யும்
சரி தப்பிக்க வழி
ஒரு கல்
அது உங்கள் கைகள் எடுக்கும்
முதல் கல்லாக கூட இருக்கலாம்
ஆனால் அது கூர்மையான கல்லாக
இருத்தல் அவசியம்
கொஞ்சம் ஆத்திரம் கூடி
சொல்வதற்காக மன்னித்துவிடுங்கள்
அக்கல்லைக்கொண்டு மிக சரியாக அவ்விளையவனின் ஆதி கபாலத்தை உடைத்து திறவாமல்
உங்களால் அச்சத்ததிலிருந்து தப்பிக்கவே முடியாது
ஆனால் என் பிரார்த்தனையென்பது
அப்படியொரு அகால தருணம்
உங்களுக்கேனும் வாய்க்காதிருக்கட்டும் என்பதே..
நன்றி கதிரவன் இரும்பொறை
https://m.facebook.com/story.php?story_fbid=10209672329285042&id=1833873912
======================================================================
பரியேறும்பெருமாள் மட்டுமல்ல ஆனந்தும்(யோகி பாபு) தான் சாதியொழிப்பின் அடிப்படையாய் இருக்கப்போகிறார்கள்...
"என்னது எங்காளா..."
"சாதிபாத்தாடா பழுகுறன் உங்கிட்ட"...
"என்னன்னு சொல்லுடா நான் சாத்துறன் அவன..."
பரியேறும்பெருமாளின் அப்பாவை வேட்டியை உருவி ஓடவிடும்போது பரியனோடு சேர்ந்து துடிக்கும் அந்த ஆனந்த்...
அந்த அப்பாவை தன் அப்பாவாய் காப்பாற்ற ஓடும் அந்த ஆனந்த்...
பரியனை ஜோவை பார்க்க அனுப்பிவிட்டு அவன் தாய்தந்தையோடு இருக்கும் அந்த ஆனந்த்...
பரியனோடு, எந்தவிதத்திலும் வேறுபாடில்லாமல் பரியனை போலவே இருக்கும் அந்த ஆனந்த்...
பரியனை தன் சாதியை சேர்ந்த ஜோவோடு சேர்க்க நினைக்கும் அந்த ஆனந்த்...
ஏதும் செய்ய முடியாமல் புழுங்கிசாகும் பரியனை புரிந்துகொள்ள முயற்சிக்கும் அந்த ஆனந்த்...
மேன்மையானவன்... போற்றத்தக்கவன்... அற்புதமானவன்...
பரியனுக்கு தெரியாமல் இருக்கலாம்... ஆனந்த் இந்த சமூகத்திற்கே தேவதை...
பரியனும், ஆனந்தும் சேர்ந்துதான் சாதியை ஒழிப்பார்கள்... அவர்களால் தான் சாதியை ஒழிக்க முடியும்...
=================================================================
சமூகத்தின் பார்வையையே மாற்ற வல்ல மகத்தான ஆயுதம் இந்த திரைப்படம் . கலையின் உச்சம் . ஒவ்வொருவரும் குடும்பமாய் காண வேண்டுகிறேன் !
பரியேறும் பெருமாள் ஒரு அற்புதமான படைப்பு. கலைஞர்களின் நடிப்பு, இடம் தேர்வு, கேமரா என அனைத்திலும் வெற்றியடைந்த படம் என்று கூறலாம். அனைத்து கலைஞர்களுமே சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். நடிகர், நடிகைக்கு இடையேயான காதலும் ஆத்மார்த்தமானதாக உள்ளது. சமீபகாலமாக வரும் படங்களில் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது இதையெல்லாம் தாண்டி, ஆணும், பெண்ணும் ஒரே வீட்டில் வசிப்பது போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இப்படி இருக்க ஆண், பெண் இருவருக்கிடையேயான காதலை நாகரிகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள். எந்த இடத்திலும் சினிமாத்தனமாக இருப்பதாக உணரமுடியவில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவர்களின் வலிகளை, அவர்களின் போராட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதை காட்சிப்படுத்திய விதத்திலும் இயக்குநராக மாரி செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். பா.ரஞ்சித் தன்னுடைய படங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரல்களை பதிய வைத்து வருகிறார். அவரது தயாரிப்பிலும் அது எதிரொலித்திருப்பது கவனிக்கப்பட வேண்டியது ஒன்று. தாழ்த்தப்பட்டவர்கள் மேலே வர, என்ன தான் முயற்சி செய்தாலும், மேலே இருப்பவர்கள் அவர்களை கீழே தள்ள தான் முயற்சி செய்வார்கள் என்பதை பதிய வைக்கிறார் ரஞ்சித். ஆனால் அதுபற்றி அறியாதவர்களின் மனதில் அது தவறாக விதைகப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பரியேறும் பெருமாள் / விமர்சனம்
கோபத்தை மட்டுமே தின்று கொழுத்துப் போயிருக்கும் ஆதிக்க சாதியின் மனதை அரிவாளால் அல்ல... அறிவால் சுரண்ட நினைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மாரி.செல்வராஜ். சேரிகளின் ரசம் போன கண்ணாடிகளை சிறுக சிறுக சேகரித்து அவர் செய்திருக்கும் இந்த சூரியன் பல உண்மைகளை சுட்டெரித்திருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த குரல்தான் ‘பரியேறும் பெருமாள்’. ஆனால் தடுக்கவே முடியாதளவுக்கு தாண்டிக் குதித்திருக்கிறது. நினைத்திருந்தால் வன்முறையை தூண்டுகிற அளவுக்கு இப்படத்தை நகர்த்தியிருக்கலாம். ஆனால் யாருக்கும் நோகாமல், யாருக்கும் வலிக்காமல் எல்லாரையும் யோசிக்க விட்டிருக்கிறார் மாரி.செல்வராஜ். இந்த கதையை அவர் கையாண்ட விதமே ஒட்டுமொத்த சமூகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் உணர்வை வெளிப்படுத்திவிடுகிறது.
தமிழ்சினிமாவுக்கு எப்பவோ வந்து சேர்ந்திருக்க வேண்டிய இந்த புதையலை தன் மனத்திற்குள் எத்தனை காலம் ஒளித்து வைத்திருந்தாரோ?
திருநெல்வேலி சட்டக்கல்லூரிக்கு படிக்க வரும் கதிர்தான் பரியேறும்பெருமாள். பத்தாம் வகுப்பில் 360க்கும் மேல் மார்க் எடுத்திருந்தாலும், ஆங்கிலப்பாடத்தில் மட்டும் ஆறோ, ஏழோ? வகுப்பே சிரிக்கிறது இவரது ஆங்கில அறிவை பார்த்து. அந்த நேரத்தில்தான் சக மாணவி ஆனந்தி ஆங்கிலம் சொல்லித் தருகிறார் கதிருக்கு. கதிர் முற்றி நெல்லாகும் என்று ஆனந்தி காத்திருக்க, இந்தக் கதிரை சுற்றி புதரும் அருவாளும் முளைக்கிறது. இவர்களின் நல்ல நட்பை காதலாக கருதும் ஆனந்தியின் குடும்பம், அவரை சகட்டுமேனிக்கு தாக்கி ஒரு கட்டத்தில் கொல்லவே முயல்கிறது. தப்பிக்கிற கதிர் அப்பவும் தன் சோகக்கதையை ஆனந்தியிடம் சொல்லாமல் ஒதுங்குகிறார். கதிர் விலகிப் போவதை சகிக்க முடியாத ஆனந்தி என்னவானார்? கதிரின் கல்லூரி படிப்பு என்னவானது? ஒரு சிறுகதையின் கடைசி வரி போல படம் முடிய... கனத்த மனதோடு வெளியே வருகிறோம். சே... என்னடா உலகம் இது? என்ற நினைப்பு சூழ்ந்து கொள்கிறது நம்மை.
‘பரியேறும் பெருமாள். பி.ஏ.பி.எல். மேலே ஒரு கோடு’ என்று கம்பீரமாக நுழையும் கதிரின் கல்லூரி வருகை சிற்சில மொக்கை ஜோக்குகளால் நகர்ந்தாலும், ஆனந்தியின் வீட்டு கல்யாணத்துக்கு போகிற தருணம் வரைக்கும்தான் அதெல்லாம். அதற்கப்புறம் ஒவ்வொரு காட்சியும் படபடக்க விடுகிறது. சேற்றில் விழுந்து, ரயில்வே டிராக்கில் கட்டுண்டு, மேட்டிலிருந்து உருண்டு புரண்டு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் கதிர். க்ளைமாக்ஸ் நெருங்கும்போது நிறுத்தி நிதானமாக அவர் பேசும் சில வசனங்கள், கலகம் பிறக்கும் இடத்திலெல்லாம் கல்வெட்டாய் இருக்க வேண்டிய வார்த்தைகள். முதலில் வாடகைக்கு ஒரு அப்பாவை அழைத்துக் கொண்டு பிரின்சிபாலை சந்திக்கும் கதிர் அதற்கப்புறம் நிஜ அப்பாவோடு வருவதும், அதற்கப்புறம் நடக்கிற சம்பவங்களும் ஈரக்குலையை அறுத்தே விடுகிறது.
ஆனந்தி, ஒவ்வொரு ஷாட்டிலும் ‘கிளிப்பேச்சு பேசவா?’ என்கிறார். விலக விலகதான் காதல் வரும். எப்படியோ தேடி வந்து கதிரை சந்திக்கும் ஆனந்தி, ‘நான் கண்ணை மூடிகிட்டு கொஞ்சம் பேசிக்கிறேன்’ என்று கூறிவிட்டு பேசுவது அதிர்ச்சி ப்ளஸ் அழகு!
சற்றே ஏமாந்திருந்தாலும், படம் காற்று போன சோடாவாக மாறியிருக்கும். யோகிபாபு என்கிற வசமான ஆளை உள்ளே இறக்கி கலகலப்பை தூவியிருக்கிறார் டைரக்டர். ‘சின்ன சி யா? பெரிய சி யா?’ என்று அவர் கேட்கும்போது தியேட்டரே குலுங்குகிறது.
இரண்டு புதுமுகங்கள் இருக்கிறார்கள் பரியேறும் பெருமாளில். இந்த பசுவுக்குள்ளும் இப்படி ஒரு சைத்தானா என்று நினைக்க வைக்கிறார் கராத்தே வெங்கடேஷ். கொலை என்பதே தெரியாமல் கொலை செய்துவிடுகிற அவரது டெக்னிக், அலற வைக்கிறது. குற்றவுணர்ச்சியே இல்லாமல் அசால்டாக அவர் செய்யும் கொலைகளை, சாமிக்கு படைக்கும் அர்ச்சனை போல அவர் பேசுவதுதான் ஷாக். மற்றொருவர் கரகாட்ட கலைஞர் தங்கசாமி. தன் மகனை பார்க்க கல்லூரிக்கு வரும் அவர் அங்கு அனுபவிக்கும் கொடுமை இருக்கிறதே... மகா பயங்கரம். இவ்விருவரும் எதிர்கால சினிமாவில் முக்கிய இடம் பிடித்தால் ஆச்சர்யமில்லை.
முதல் சில காட்சிகளில் வரும் அந்த நாய் கருப்பி... ஆறாம் அறிவுகள் படுகிற பாட்டை சொல்ல வந்த ஐந்தாம் அறிவு! ‘சாதி பிடிக்கலேங்கறதுக்காக நாயைக் கூடவா கொல்வானுங்க?’ என்று பதற விடுகிறது அந்த சம்பவம். கருப்பிக்காக ஒரு பாட்டு. அதில் எழுதப்பட்டிருக்கும் வரிகள் சட்டை காலரை இழுத்துப்பிடித்து கவனிக்க வைக்கிறது.
ஆனந்தியின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து, ஒரு காட்சியே வந்தாலும் கலக்கிவிட்டு போகும் சண்முகராஜா, பிரின்சிபால் பூ ராம், இவர்கள் மட்டுமல்ல... அந்த கல்லூரியின் ஆசிரியைகள், கதிருக்கு பிட் கொடுத்து உதவும் எக்சாம் சூப்பர்வைசர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை பேரும் கவனித்து கைதட்ட வைக்கிறார்கள்.
இந்த கதையின் அடிநாதம் எதுவோ, அதை சரியாக உணர்ந்து பின்னணி இசையை மிக்ஸ் பண்ணியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். கருப்பி பாடலில் உயிர் கரைகிறது. எல்லா பாடல்களும் மனதை விட்டு அகலாத ட்யூன்கள்.
ஒரு தியேட்டருக்குள் இருக்கிறோம் என்கிற உணர்வே வராதளவுக்கு படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.
சாதி பெருமைக்காக உயிர்களை தின்னும் கரையானின் வாய்க்குள் கையை விட்டு பல்லை பெயர்த்திருக்கிறார் மாரி.செல்வராஜ். அதுதான் காலத்தின் அவசியமும் கூட!
-ஆர்.எஸ்.அந்தணன்
newtamilcinema.com

Comments
Post a Comment