சாதிய ஒழிக்காமல் புரட்சியை நிகழ்த்த முடியாது ?..

சாதிய ஒழிக்காமல் புரட்சியை நிகழ்த்த முடியாது...ஆகையால், முதலில் சாதியை ஒழிப்போம் என்று கூறும் கருத்து வரலாற்று பார்வையில்லாத, குறைபாடுடைய கருத்து....
இந்த அமைப்பிற்குள்ளேயே, இந்த அரசின் கீழேயே சாதியை ஒழித்துவிட முடியுமென்று நம்புகிறவர்கள் பெரியாரிஸ்டாக, அம்பேட்கரிஸ்டாக, கம்யூனிஸ்டாக பிரகடனம் செய்து கொண்டாலும்.
சாதிக்கும், இந்தியாவில் நிலவுகிற அமைப்புக்கும் தொடர்பு, இந்தியாவில் நிறுவப்பட்டிருக்கிற அரசு குறித்தும் கவலைப்படாமல் சொல்லுகிற மேம்போக்கான கருத்து...
சாதியின் கொடூரத்தை உணராமல் உதிர்க்கிற சோம்பேறித்தனமான கருத்து..
நடைமுறையில் இருக்கிற அமைப்பு பிரிட்டிஷ் காலத்தில் தன்னுடைய நிர்வாக தேவைக்காக லேசாக நெகிழ்ந்து கொடுத்திருந்தாலும், சுவாசிக்க இடம் கொடுத்திருந்தாலும், சாதியை ஒழிப்பது அதன் நோக்கம் கிடையாது, ஒழிக்கவும் செய்யாது..
அம்பேட்கர் பிரிட்டிஷாரை நோக்கி அதைத்தான் சொன்னார்....அதே விதி நடப்பிலிருக்கிற ஆளும் வர்க்கத்திற்கும் பொருந்தும்.. அதை மீறி, வாங்க கைல மை வைக்கலாம்னு யாராது சொன்னா...
உங்க வாய்ல...........விரல் வச்சிருக்கீங்கன்னு நினைச்சிருக்காங்கன்னு அர்த்தம்.....
வரலாற்று கற்றுணர்ந்தால், கடினமென்றாலும் புரட்சிகர அரசால்தான் சாதியை ஒழிக்க முடியும், வேறு குறுக்கு வழிகள் கிடையாது என்பதை புரிந்து கொள்ளலாம்...
கூட, குறைய இருந்தாலும், சாதி ஒழிப்பை தன்னுடைய புரட்சிகர வேலைத்திட்டத்தில் இணைத்துள்ள  கட்சிகளின் ஆவணத்தை கண்ணோட்டத்தை பக்க, சார்பில்லாமல் கற்றுணருங்கள்..... தவறிருந்தால், அவர்களை செழுமைப்படுத்த உங்கள் அறிவாளுமையின் மூலம் உதவுங்கள்...
ஆனால், தயவு செஞ்சு பழைய தேஞ்ச ரெக்கார்டான.....சாதியை ஒழிக்காமல் புரட்சி சாத்தியமில்லை என்று கூறாதீர்கள்....
உரையாடலாம்..
[08:30, 9/25/2018] Makizhnan: 2/1
இழிவுப்படுத்துதல் சாதிக்கு துணை செய்கின்ற அம்சம் என்றாலும், சாதியின்  பிரதான நோக்கம் சுரண்டல்தானேயன்றி, இழிவுப்படுத்துதல் அல்ல. சாதி நான்கைந்து மந்திரங்கள் ஓதி உருவாக்கப்பட்டதல்ல, ஒரு குறிப்பிட்ட சாதியின் தனி விருப்பமாக சாதி உருவானதல்ல.
சாதி நிலவுடமை அமைப்பிற்கு உறுதுணையாக உருவாக்கப்பட்ட கருவி. வேறு சொற்களில் கூற வேண்டுமானால், அது தனியுடமையின் வெளிப்பாடு. தனி உடமையை உறுதி செய்வதற்கென கண்டுபிடிக்கப்பட்ட உத்தி சாதி.
தனியுடமையை, சாதியை நிலைபெற செய்ய உருவான அரசுகளின் தொடர்ச்சியைதான் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த அரசுகள் தங்களுடைய ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்ய சாதி குறித்து வெவ்வேறு வகையான அணுகுமுறைகளை கொண்டிருந்திருக்கின்றன. மன்னராட்சி காலத்திலேயே அந்த வெவ்வேறு வகையான அணுகுமுறைகளை கொண்டிருந்திருக்கின்றன. ஆனால், சாதிக்கு பெரிய சேதாரமில்லாமல் பார்த்துக் கொண்டன.
ஏனென்றால், தங்களுடைய ஆளும் வர்க்கத்திற்கு தேவையான லாபத்தை சுரண்டலின் வழிதான் ஈட்ட முடியும், அதற்கு சாதி துணை செய்கிறது எனும் போது, லேசா சின்ன பட்டி டிங்கரிங்கோடு அதை தொடர்ந்து பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
[08:30, 9/25/2018] Makizhnan: 2/2
இந்தியாவில் 1857க்கு பிறகு, கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து அதிகாரம் இங்கிலாந்து ராணியின் கைகளுக்கு மாறியபின், இந்தியாவில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள நட்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றுதான் இட ஒதுக்கீடு, பாராளுமன்ற ஏற்பாடு எல்லாம். இதில் பஞ்சமி நிலத்தையும் சேர்த்து கொள்ளலாம். (நமக்கு பொருந்துங்கிறதுனால)
சாதி கொடுத்த ஓசி தீனி சொத்துகள் அத்தனையையும் சில குறிப்பிட்ட சாதிகள் கையில் கொடுத்து, பண்ணையடிமை முறை மூலம் கிராமப்புறத்தில் சுரண்டி கொடுத்தவற்றின் மூலம் கிழக்கிந்திய கம்பெனியை போலவே, பிரிட்டிஷ் அரசு தன்  கஜானாவை நிரப்பி கொண்டது….
இந்த வரலாற்று கட்டத்திலும், சாதிக்கு சில பட்டி டிங்கரிங்க் வேலைகள் நடந்தன என்றாலும், சாதியை காப்பாற்றும் கடமையையும் ஆங்கிலேய அரசு கைவிட்டுவிட வில்லை..
ஒரு எடுத்துக்காட்டோடு சொல்ல வேண்டுமென்றால், ஆட்சியை நிறுவுவதற்கு பயன்பட்ட மகர் ரெஜிமெண்ட், பின்னாட்களில் இடைநிலைசாதிகளின் செல்வாக்கை பெற மகர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்தி கொண்டது பிரிட்டிஷ் அரசு.
அம்பேட்கர் பார்வையில் ஆன்ம பலத்தை கொடுத்த இராணுவ பணி, ஆங்கிலேய அரசின் சாதி காப்பாற்றும் கடமை உணர்ச்சியின் காரணமாக நிறுத்தப்பட்டது.
அப்படியிருக்க, இன்றிருக்கிற அரசும் அதன் தொடர்ச்சிதான். அது சாதியை ஒழிக்கவே விடாது.
அதாவது, மறு பங்கீட்டையோ, குடியிருப்புகளை ஜனநாயகப்பூர்வமாக அனைவரும் குடியிருப்பவகையாகவோ மாற்ற விடாது.
அதை செய்ய புரட்சிகர கண்ணோட்டம் கொண்ட அரசின் தேவை இருக்கிறது. அதை நிறுவ வேண்டுமென்றால், எத்தனை கடினமாயினும் பாட்டாளிகளை திரட்டி புரட்சிகர அரசை அமைக்க வேண்டும், அஃதில்லாமல், நாம் தொடர்ந்து கருத்தை தேக்க நிலையிலேயே வைத்திருந்தால், அந்த மெத்தனத்தை நம் வருங்கால தலைமுறையினர் மன்னிக்க மாட்டார்கள்..

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி