டாப் சிலிப்” தமிழகத்தின் இயற்கை எழில் மிகுந்த இடம்.
"டாப் சிலிப்" தமிழகத்தின் இயற்கை எழில் மிகுந்த இடம். மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பெருக்கும் மிகுந்த பத்து இடங்களில் இதுவே முதன்மையானது. 1800-1900-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்த மலையிலிருந்த ஏராளமான தேக்கு மரங்கள் வெட்டி இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மொட்டைக் காடாக கிடந்த இந்த மலைத்தொடருக்கு 1917-இல் வந்த ஆங்கிலேயே வனத்துறை அலுவலரான ஹூகோ வுட் என்ற IFS அலுவலர், இந்த மலைப்பகுதியை மறு சீரமைப்பு செய்யும் நோக்கில் நீலாம்பூர் தேக்கு மரக்கன்றுகளை இந்த மலையில் நடவு செய்துள்ளார். இன்று ஆனைமலை புலிகள் சரணாலயம் மற்றும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் இருக்கும் பல இலட்சம் தேக்கு மரங்களும் ஹூகோ வுட் அவர்களால் நடப்பட்டது. இந்த மலைப்பகுதியில் மரம் நடுவதை மட்டுமே வேலையாக கொண்டிருந்த ஹூகோ வுட் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனக்கென சொத்து எதையும் சேர்த்து வைக்கவில்லை. கடைசிவரை உலாந்தி பள்ளத்தாக்கில் உள்ள மவுன்ட் ஷ்வாட்ஸ் என்ற பெயருடைய வீட்டில் வசித்து வந்தவர் தனது 63-வது வயதில் மரணமடைந்துள்ளார். அவரது உடல் உலந்தி பள்ளத்தில் உள்ள ஹூகோ வுட் இல்லத்துக்கு...