Source :-https://tamiljournalism.wordpress.com தமிழ் தளத்தில் ஊடகவியல் – மக்களுக்கான ஊடகமும்-ஊடகவியலும் ஊடகம் என்றால் என்ன? பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது, காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஒரு செப்புக்கம்பி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மின்சாரத்தை கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாகச் செயற்படுகிறது.அதே போல ஒருவர் பேசும்பேச்சை,மற்றவர் கேட்பதற்கு அதை ஒலி அலைகளாகச் சுமந்து செல்லும் காற்று ஊடகமாகச் செயற்படுகிறது. ஊடகவியல் என்கிறபோது அது மனிதர்களுக்கிடையி;ல் கருத்துக்களை –தகவல்களை காவிச் செல்கின்ற -பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம். குறிப்பாகச் சொல்வதானால் கருத்தியலை கட்டமைப்பது,மனிதர்களினதும் சமுகத்தினதும் இருப்பை தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பது,அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குவது என்று ஊடகவியலில் சர்வ வியாபகத் தன்மையை விளக்கலாம். ஊடகவியலின் செயற்பாடு முதல்க...
Comments
Post a Comment