கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
⚫😄🎵😄🎵😄🎵😄
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நினைவு நாள் இன்று...
⚫🎵😄🎵😄🎵😄⚫
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவக்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர்.
காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.
⚫😄🎵😄⚫
திரைப்படம்: முதல் தேதி
இயற்றியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
ஆண்டு: 1955
😄😄😄😄
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி
ஒண்ணிலே இருந்து சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் சம்பளத் தேதி

கொண்டாட்டம் கொண்டாட்டம்
பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே
தேதி ஒண்ணிலே - மனுஷன்
படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே இருபத்தொண்ணிலே
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி
ஒண்ணிலே பின்னும்
மூணாம் பேஸ்து விழுந்தது போலே
முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே

தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே

அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்

அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே - ஆமா

சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே
கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே அவர்
கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே - கொஞ்சம்
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே
எந்த நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே...
⚫🎵😄🎵😄🎵😄
வாழ்க தமிழுடன்...
🙏

Comments
Post a Comment