மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் சென்னையிலுள்ள இயற்கை ஆர்வலர்களை அன்போடு அழைக்கிறோம். கோவையில் வரும் நவம்பர் 30, டிசம்பர் 1 & 2 ஆகிய மூன்று நாட்கள் மேற்கு மலை உயிர்ச்சூழல் திருவிழாவாக நடைபெற உள்ள தேசிய மாநாடு நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் வரும் 01.09.2018 சனிக்கிழமை நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு சென்னையிலுள்ள இயற்கை ஆர்வலர்கள் தவறாமல் வருகைதந்து தங்களின் ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்கிட அன்போடு அழைக்கிறோம். சென்னைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் என்ன தொடர்பு? சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீரும் வீராணம் தண்ணீரும் மேற்கு மலை தரும் அருங் கொடை. நாம் உண்ணும் உணவின் பெரும்பகுதி இந்த மலை தரும் தண்ணீரையே சார்ந்திருக்கிறது. நமது மண்ணின் இயற்கை வளங்களை நாம்தானே காப்பாற்ற வேண்டும். உலகின் அரிய உயிச்சூழல் வளமை மிகு ஒரு மலை நம்மிடம் உள்ளது. அதனை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையல்லவா? எனவே கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம் . நாள் : 01.09.18, சனிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : ஹோட்டல் மெட்ரோ மேனர், சிந்தன்...